2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வெளிநாடு செல்ல அனுமதி’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்துக்கு முரணான முறையில் தனது சொத்துகளை உழைத்தாரெனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நோர்வேயில் இடம்பெறும் கருத்தரொங்கொன்றில் பங்குபற்றுவதற்கும், அதேசமயம் தனிப்பிட்ட தேவைக்காக இத்தாலி செல்வதற்கும், இம்மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்காக தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இதற்கமைய, வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதோடு, நீதிமன்றத்தின் பொறுப்பிலிருக்கும் அவரது கடவுச்சீட்டை 10 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கும் படியும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .