2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளிக்கிழமையன்று மீண்டும் வேலைநிறுத்தம்?

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வைச் சங்கமும் இலங்கை ரயில்வே காப்பாளர்கள் சங்கமும், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டமொன்றை, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளன.

அவர்களது சம்பள உயர்வு சம்பந்தமாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளன. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வைச் சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கும் போது, சம்பளங்களை உயர்த்துவது தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட பணிப்புரைகளை, தேசிய ஊதிய மற்றும் பதவியணிகள் ஆணைக்குழு பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

6/2006 என்ற சுற்றறிக்கைக்கு அமைவாக, எம்.பி1, எம்.பி2 தர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குமாறு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்திருந்தார் என, அவர் குறிப்பிட்டார். “முன்னைய வேலைநிறுத்தத்தின் போது, எம்.பி1, எம்.பி2 தரத்திலுள்ள இயந்திரச் சாரதிகள், காவலர்கள், ரயில் நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரின் ஊதியத்தை உயர்த்துமாறு, ரயில்வே திணைக்களத்தை நாங்கள் கோரியிருந்தோம்” என்று தெரிவித்தார்.

செப்டெம்பர் 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் வரையில், ஒரு மாதகாலத்துக்குள் ஊதிய உயர்வை வழங்குமாறு, பதவியணி ஆணைக்குழுவிடம் கோரப்பட்டிருந்தது. அதற்கான காலக்கெடு, 20ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. “ஒருமாத காலக்கெடு, வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. பதவியணி ஆணைக்குழுவால் இதுவரை எடுக்கப்பட்ட ஒரே முடிவாக, அவர்கள் நியமிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை விடக் குறைவான சம்பளத்தைக் கொண்ட ஊதிய தரத்துக்கு அவர்கள் நியமித்தமை தான்” என்று அவர் தெரிவித்தார்.

எனவே, தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதே வழியென அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .