2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியர் ஷாபி தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, இதுவரை 758 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் கடந்த மாதம் 27ஆம் திகதி ​குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபியால் சத்திரிசிகிச்சை செய்யப்பட்ட தாய்மார் 601 பேர், விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் 7 பேர், சிரேஷ்ட வைத்தியரொருவர், குழந்தைகள் தொடர்பான வைத்தியர்கள் 6 பேர், சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியருக்கு உதவியாகச் செயற்படும் 11 வைத்தியர்கள் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியர் ஷாபியிடம் பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினமே  இந்த வாக்குமூல அறிக்கையின் சுருக்கத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .