2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வைரஸை ஆராய தெற்குக்கு விரைகிறது குழு

Editorial   / 2018 மே 20 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்துப் பரிசோதனைகளை மேற்கொள்ளவென, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர், குறித்த பகுதிக்கு நாளை செல்லவுள்ளனர் என, சுகாதார சேவைப் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்​போது, குறித்த குழுவினர் காலி, மாத்தறை, கம்புருப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த வைரஸ் நோய்த்தாக்கத்தின் காரணமாக, 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை ஆராயும் முகமாக, இதற்கு முன்னர், மருத்துவ பரிசோதனை நிறுவனம், தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு என்பன குறித்த பகுதிகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு, அது குறித்த அறிக்கையை, சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளன.

இந்த அறிக்கைக்கு அமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆராய்வதற்காகவே, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர், குறித்த பகுதிகளுக்கு நேரடியாக இன்று செல்லவுள்ளனர் என, அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .