2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வௌிவிவகார அமைச்சர் இன்று உரை

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இன்று (23) இரவு உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (22) ஆரம்பமானது.

இந்த நிலையில்,  இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாளை (24) விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை கூட்டத் தொடர் இணையவழியில் நடத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X