2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஷாபியின் மனு அடுத்த மாதம் விசாரணைக்கு

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத முறையில் சொத்து சேகரித்ததாக சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீன்  தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆராய்ந்து பார்க்க உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்துள்ளது.

குறித்த மனு, இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு அறிவிப்பு உரிய முறையில் கிடைக்கவில்லை என  சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான, பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசித் முதலிகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மீண்டும் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு விடுக்கவும், மனுவை விசாரிக்கவும் திகதி குறிக்குமாறு,  பிரதி சொலிஸிட்டர் நாயகம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தமையால், பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவிக்கவும், மனுவை 6ஆம் திகதி விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X