2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Editorial   / 2021 ஏப்ரல் 13 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியை உள்நாட்டில் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் 3ஆவது தடுப்பூசி வகையாக ஸ்புட்னிக் அமையவுள்ளது.

தற்போது வரை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொவிசீல்ட் மற்றும் கொவெக்சீன் ஆகிய தடுப்பூசிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஸ்புட்னிக் தடுப்பூசியானது இதுவரை 30க்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X