2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸ்னைபர் துப்பாக்கி விவகாரம் விசாரணை ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்த, ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று,  காணாமல்போனதாக கூறப்படும்  சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின்பேரில்,  விசேட பொலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர், ஒட்டுச்சுட்டான் பகுதியில் வைத்து ​கிளைமோர் குண்டுகளுடன்  கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபரிடம், விசாரணைகளின் மூலம்  பெறப்பட்ட  தகவலுக்கமைய, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த  ஸ்னைபர் ரக துப்பாக்கியை கைப்பற்றியிருந்தனர்.

குறித்த துப்பாக்கி, பயங்கரவாத புலனாய்வுப்பிரிவில் இருந்த நிலையில், காணாமல்  போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.                                        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X