2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹட்டனில் ஒருவர் சிக்கினார்: சந்தைக்குப் பூட்டு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா நகரசபை பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.

அங்கு வேலை செய்தவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உற்படுத்தியபோதே மேற்படி நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹட்டன் சந்தை உள்ளிட்ட சில பகுதிகள் பொது பயன்பாட்டிலிருந்து முடிக்கப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட நபரின் குடும்பத்தினரையும்  மருந்துவமனைக்கு அழைத்து செல்லப்பட நடவடிக்கை எடுத்து வருவதுடன்  அடையாளம் காணப்பட்ட நபருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர் சென்ற இடங்களை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிமைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்களும் பாதுகாப்பு பிரிவினரும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .