2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஹம்பாந்தோட்டையில் சீன இராணுவத் தளம்’ வதந்தி என்கிறார் பிரதமர்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில், சீன இராணுவத் தளமொன்று அமைக்கப்படப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமெனவும்  வலியுறுத்தியுள்ளார்.

சீனத் தூதுவர் செங் சியுஹானுக்கும், பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சில வெளிநாட்டு ஊடகங்கள் ஹம்பாந்தோட்டையில் சீன இராணுவத்தளமொன்று அமைக்கப்படப்போகின்றதா? என்ற தொனியில் கேள்வி எழுப்பியிருந்ததாக, சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு நிதி நகரம், உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கை சீனாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல புதிய பல முதலீடுகளை ஈர்த்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .