2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடம் விசாரணைக்கு

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ரவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 12,13ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞரொருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே ஹிருணிகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வழக்கின் விசாரணைகள் இடம்பெறும் தினத்தில் குறித்த வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிலிருந்து 7ஆவது சாட்சியாளர் வரை அனைத்து சாட்சியாளர்களும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென மேல்நீதிமன்ற நீதிபதியால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின்  8 சாட்சியாளர்களும் ஹிருணிகாவின் பாதுகாப்பு உத்தி​யோகஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .