2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனமுறுகலுக்கு தோல்வி அடைந்தோரே காரணம்’

Editorial   / 2017 மே 28 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஆட்சியைக் கைப்பற்ற முடியாத கோபத்திலுள்ள அரசியல்வாதிகளே, மக்களிடையே இனமுறுகலை தோற்றுவித்து வருகின்றனர்” என, அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.   

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகளே, இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர். அவர்களின் செயற்பாடுகளில் மக்கள் பலியாகிவிடக்கூடாது.  

“இனக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம், நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க முயலும் இந்த அரசியல்வாதிகள், வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகச் செயற்பட்டு வருகின்றனர்.  

“நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருவதால், இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்களின் செல்வாக்கை முற்றாக இழந்திருக்கும் இவர்கள், முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டப்படுவார்கள்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .