2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்து விடைபெறுகிறேன்’

Editorial   / 2017 மே 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் எந்தவொரு பதவியையும் கேட்டுவாங்கவில்லை, யாருக்கும் எதையும் எழுதுவதற்கு,பேசுவதற்கு சுதந்திரத்தை ஏற்படுத்தி விட்டே வேறோர் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றேன்” என்று, அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.  

கொழும்பில்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,   

“ஊடகங்கள், தகவல்களை சரியாக அறிந்து எழுதுவது சிறந்தது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தை கொண்டு வந்த நபர் என்ற ரீதியில் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.  

யாருக்கும் எதையும் எழுதவதற்கு, பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. அவ்வாறானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டே வேறோர் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.  

ஊடக அமைச்சுப் பதவியைக் கூட தான் கேட்டுப்பெறவில்லை. நான் எப்பொழுதும் ஊடக சுதந்திரங்கள் மீது கைவைக்கவில்லை. எந்தவொரு விமர்சனங்களையும் எழுதுவதற்கு இடமளித்துள்ளேன்” என்றார்.  

மேலும், “நல்லாட்சியில் எந்தவொரு ஊடகவியலாளரும் தாக்கப்படவோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு தப்பிச் செல்லவோ இல்லை” எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X