2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘3 வருடங்கள் பின்னோக்கி பார்ப்போம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  

 

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் விமர்சித்துக் கொண்டிருப்பதுடன், இந்த அரசாங்கத்தினால் என்ன செய்யப்பட்டுள்ளதென்று பரவலாக கேட்கின்றார்களெனவும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ், தோப்பூர் செல்வநகர் முஸ்லிம் மையவாடிக்கு (மயானத்திற்கு) 2 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10), இடம் பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவ

அங்கு அவர் தொடர்ந்துரைக்கும் போது, நாங்கள் 3 வருடத்தை பின்னோக்கி பார்ப்போமாக இருந்தால் அவர்கள் என்ன அபிவிருத்தி செய்தார்கள் என்பதையும், முஸ்லிம்கள் தமது உடைமைகளை பாதுகாப்பது தொடர்பில் பட்ட கஷ்டங்களையும் விளங்கிக் கொள்ள முடியுமெனத் தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வீட்டுத் திட்டத்தை திறந்து வைக்கின்றார். அவர் முஸ்லிம், தமிழ், சிங்களம் என்று பாகுபாடு பாராமல் வேலை செய்கின்றார். அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவியேற்ற பின் இதுவரை 13 தடவைகள் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளாரெனத் தெரிவித்ததுடன், முன்னைய அமைச்சர்கள் எத்தனை தடவைகள் திருகோணமலைக்கு வந்துள்ளார்கள் என்பதையும் பாருங்களெனவும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .