2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

382 பேருக்கு காணி ஆவணம் வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை -  பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம சேவயாளர் பிரிவில், காணி ஆவணம் கோரி விண்ணப்பித்த 382 பேருக்கு, காணிக்கான  ஆவணம் வழங்குவது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் , ​நேற்று (19) நடைபெற்றன.

பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின்  உதவிப்  பிரதேச செயலாளர் திருமதி அபேரத்ன தலைமையில், வெள்ளைமணல் பல்தேவைக் கட்டடத்தில், இவ்விசாரணைகள் நடைபெற்றன.

இதில் குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த உதவி பிரதேச செயலாளர், இங்கு விண்ணப்பித்தவர்களில் அனேகமானோர், இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய காணிகளில் வசித்துவருகிறார்கள் எனக் கூறியதுடன், இந்த  மக்களுக்குத் தம்மால் காணி ஆவணம் வழங்க முடியாதெனவும் துறைமுக அதிகார சபைக்குரிய காணியை, துறைமுக அதிகார சபை  முறையாக  அரசுக்கு இக்காணிகளை விடுவித்த பிறகே, தம்மால்  காணி ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

ஆனால், அரச காணிகளில வசிப்போருக்கு காணி ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது  அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .