2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

9.9கி.கி ஹெரோய்ன்; சந்தேகநபர்கள் தடுத்துவைப்பு

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 12 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் சுமார் 118 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9.9 கிலோகிராம் ஹெரோய்ன், நேற்று  (11) மாலை கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும், எதிர்வரும் 17ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு, புலனாய்வுப் பிரிவினருக்கு, நீதவான் எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.  

சந்தேகநபர்கள்,  இருவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(12) ஆஜர்படுத்தியதை அடுத்தே, அவர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, புலனாய்வுப் பிரிவினருக்கு, நீதவான் உத்தரவிட்டார். 

பெருந்தொகை ஹெரோய்ன் போதைப்பொருளை, வாழைத்தோட்டம் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக, கொழும்பு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்த வருகை தந்த புலனாய்வுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டபோதே, மேற்படி ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டதாகப் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

அரிசி ஆலையொன்றில் ​இருந்த அரிசி மூடைகளில் 22 பக்கெட்டுகளாக இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .