2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரச சேவையை அர்த்தமுள்ளதாக்கும் பொருட்டு புத்தாண்டில் புதுப்பொலிவு

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

 

அரச சேவையை அர்த்தமுள்ளதாக்கும் பொருட்டு,  கிண்ணியா நகர சபையின்   மக்களுக்கான சேவைகளின் உற்பத்தித் திறனையும் அலுவலகத்தின் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்காக, எதிர்வரும் புத்தாண்டில் இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, கிண்ணியா நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான என்.எம். நெளபீஸ் தெரிவித்தார்.

பொதுமக்கள் சேவையை  மேம்படுத்துவது  தொடர்பாக  இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அலுவலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அலுவலகம், சேவை  நோக்குடையதாக ஒழுங்கமைப்பு செய்யயப்படல் வேண்டும். இதன்மூலமே, சேவைகளில் வினைத்திறனை அதிகரிக்க முடியும். இதற்காக உற்பத்தித்திறன் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

“எந்தச் சந்தர்ப்பத்திலேனும்  பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளை பதிவு செய்து, உரிய உத்தியோகத்தருக்கு அறிவிப்பதும்  பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை பெறும் விதத்தில் ஆலோசனைப் பெட்டி அமைப்பதும் முக்கியமான விடயங்களாகும்.

“அத்தோடு, பொதுமக்கள் இலகுவாக சேவை பெறுவதற்கேற்ப அலுவலகத்தின் ஒழுங்கமைப்பை மாற்றியமைத்தல், மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடல், அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்குமான வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்கமைத்தல், வெளிப்படைத்தன்மை பேணும் நோக்கில் ஒவ்வொரு பிரிவிலும் நகரசபையின் செயற்றிட்டம் தொடர்பான முக்கிய விடயங்களைக் காட்சிப்படுத்தல் என்பனவும் அத்தியாவசியமாகும்.

“நிர்வாகத் தேவைக்கேற்ப ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் அவரவர் பதவிக்கேற்ப கிளைகள் மாற்றப்பட்டதுடன், சேவை நோக்குடனான கடமைகளும் வழங்கப்படும்.

 “மேலும், வீண் விரயமாவதைத் தடுத்தல், மீள் பயன்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அரச வளங்கள் விரயமாதலைத் தடுத்தல் உள்ளிட்ட சகல விடயங்களும் சரியாக ஆரம்பிக்கப்பட்டு செயற்படுவதை உறுதிப்படுத்தப்படுவதற்கான மேற்பார்வைக் குழுவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“வருகின்ற எந்தவொரு பொதுமக்களும் சேவை பெற்றே திரும்ப வேண்டும் என்பதுடன், அவ்வாறு உடனடி சேவை வழங்க முடியாதவிடத்து, செயலாளருக்கு அறிவித்தல் போன்ற 15 அம்சத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு  புதிய ஆண்டில் நாம் தயாராவோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .