2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அரசாங்கம் வாக்குகளைத் தக்கவைக்க முயல்கின்றது’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

தற்போதைய அரசாங்கம் வேலைவாய்ப்பை வழங்கியும் பயமுறுத்தியும் தமது வாக்குகளைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றது என முன்னாள் முன்னாள் துறைமுகங்கள் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அவரது பிரத்தியேகக் காரியாலயத்தில் ஊடக சந்திப்பொன்றை, நேற்று (29) நடத்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்  

ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு தற்பொழுது அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள ஜனாதிபதி, அவர்களுடைய அமைச்சர்கள் கூறுவது போன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது. 45 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை சமூகத்தினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் நாட்டினுடைய பிரதமரைத் தீர்மானிப்பது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

 “எதிர்காலத்தில் ஒரு நல்லிணக்க ஆட்சியை மலையக, வடக்கு, கிழக்கு மக்களால் ஏற்படுத்த முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .