2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அரசியல் ரீதியாக ‘பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மிக விரைவில் கொடுப்பனவு’

Editorial   / 2018 மே 08 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம். றிபாஸ்
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், பதவியுயர்வுகள் ஆகியன மிக விரைவில் வழங்கப்படுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் உறுதியளித்தார்.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது அலுவகத்தில் இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்ததாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலர், சட்டத்துக்கு முரணாக அரசியல் காரணங்களுக்காக அலுவலக ரீதியில் பழிவாங்கப்பட்டனர். இவ்வாறு அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்களுக்குக் கொடுப்பனவு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க எமது அரசாங்கம் தீர்மானித்து, இந்தச் சலுகைகளை தகுதியானவர்களுக்கு வழங்க நேர்முக தேர்வையும் நடத்தி இருந்தது.
“எனினும், ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தச் சலுகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு நேர்முகத் தேர்வை முடித்த ஆசிரியர்களின் சலுகைகளை விரைவில் வழங்குமாறு கூறி, கல்வி அமைச்சரும் எமது கட்சியின் செயலாளருமான அகில்விராஜ் காரியவசத்தை ஆசிரியர் சங்கத்துடன் சந்தித்துக் கலந்துரையாடினேன்" என்று குறிப்பிட்டார்.
கொடுப்பனவுகள் வழங்கும் இந்நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனவெனவும், மிக விரைவில் தகுதியானவர்களுக்குபட பதவி உயர்வும் கொடுப்பனவுகளையும் வழங்கப்படுமெனவும், அமைச்சர் உறுதியளித்தார் என, இம்ரான் எம்.பி குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X