2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அலைபேசி கடையுடைப்பு; கைக்குண்டு, வாள்களுடன் நால்வர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

 

திருகோணமலை மற்றும் கந்தளாயில், அலைபேசி கடையுடைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை, கைக்குண்டு, வாள்களுடன் நேற்றிரவு (13) கைது செய்ததாக, கந்தளாய் குற்றவிசாரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நகரிலுள்ள இரண்டு அலைபேசி விற்பனைக்  கடைகளையும் கந்தளாயில் உள்ள ஒரு அலைபேசி விற்பனைக் கடையையும் உடைத்து, அலைபேசிகள், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள், இரண்டு மடிகணினிகள், பற்றரிகள், ஷார்ஜர், 1 இலட்சம் ரூபாய் பணம் போன்றவற்றைத் திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நால்வரைக் கைதுசெய்ததாக, கந்தளாய் தலைமையகக் குற்றவிசாரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரும், காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது, தம்பலகாமம் பகுதியில் வைத்து கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், காத்தான்குடி, அக்கரைப்பற்று, பொத்துவில் பகுதிகளைச் சேர்ந்த 25, 18, 19, 34 வயதுடையவர்கள் என்றும் அவர்களிடமிருந்து, கைக்குண்டு, வாள்கள், சிறிய கத்தி, மடிக்கணினிகள் 2, பணம், அலைபேசிகள் மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றனவும் கைப்பற்றியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார், கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உள்ளதாகவும், பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .