2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அல்தாரீக் மகா வித்தியாலயத்தில் ’ஆசிரியர் பற்றாக்குறை’

எப். முபாரக்   / 2018 ஜூலை 29 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலய கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக, அப்பாடசாலையின் அதிபர் ஏ.கே.நசூர் தெரிவித்தார்.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில், 35 ஆசிரியர்கள் மாத்திரமே கல்வி கற்பிக்கின்றனர் எனவும், அதிகமான பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லையெனவும் அதிபர் கவலை தெரிவித்தார்.

750 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டனவெனவும், உயர்தர மாணவர்களுக்குக் கூட கல்வி கற்பிக்க ஆசிரியர்களை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இன்னும் நியமிக்கவில்லையெனவும், பெற்றோர்களின் நிதியுதவியில் வெளியூர்களில் இருந்து ஆரியர்களை வரவழைத்து, பாடங்களைப் போதிப்பதாகவும், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கு ஓர் ஆசிரியரே இருக்கிறாரெனவும், அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

எனவே, இது விடயத்தில் மாகாண கல்வி திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .