2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் கிழக்கு பல்கலைக்கு விஜயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 27 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, தென்கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் ஹியோ லீ, கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்துக்கு, நேற்று (26) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகவின் அழைப்பின் பேரில்,  3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரபல்யமான இடங்களை பார்வையிட்டிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான இந்த விஜயத்தின் போது,  பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்தோடு, வளாகத்தின் சமகால அபிவிருத்தித் திட்டங்களைப்  பார்வையிட்டதோடு, எதிர்கால கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், திருகோணமலை வளாகத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கின்ற கடல்சார்தொழிநுட்பமும் கடல்சார் முகாமைத்துவப் பீடத்துக்குமான திட்டங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் பீட அபிவிருத்திக்கு,  குறிப்பாக கடல் சார் தொழிநுட்பம், கப்பல் கட்டுதல், கடல்சார் சுற்றுலாத்துறை போன்ற பிரதான பகுதிகளுக்கு, கொரிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கொரிய மொழியை பல்கலைகழகத்தின் ஒரு மொழித்துறையில் கற்பிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சித்த வைத்தியத்துறை திருகோணமலை வளாகத்தில் ஒரு கற்கை பீடமாக இருப்பதால், கொரிய பாரம்பரிய மருத்துவ முறையையும் அது தொடர்பான தொழிநுட்ப மற்றும் தொழில்சார் வல்லுநனர்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X