2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்’

Editorial   / 2020 ஜூன் 21 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

“சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கும், காணி அபகரிப்புக்கு எதிராக போராடும் ஒரு குரலை இந்த மண்ணுக்கு தெரிவுசெய்ய வேண்டும்” என, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் அப்துல்லா மஃரூப் தெரிவித்தார்.

தோப்பூர்-ஆஸாத் நகர் பகுதியில், நேற்று (20)மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “இன ஒற்றுமையை வலியுறுத்தும், தமிழ்,முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி சேவையாற்றக்கூடிய ஒரு தலைவனை இம்முறை  நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்ப வேண்டும்.

“வடக்கு -  கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் தமிழ் - முஸ்லிம்களின் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்று ஞானசேர தேரர் கூறுகிறார்.

“இவ்வாறான நிலையில் எந்தவொரு சவாலுக்கும் குரல் கொடுக்க கூடிய, உரிமைகளை வென்றெடுக்க கூடிய தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும்.

“இனவாதத்தை கக்குகின்ற  பலர், எப்படியாவது இந்த மண்ணில் இருந்து சிறுபான்மை சமூகத்தை நீக்க வேண்டும் என்று ஈடுபடுகிறார்கள். எனினும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது.

“இப்போது, தொல்பொருள் ஆராய்ச்சி என்கிற போர்வையில் சிறுபான்மை சமூகத்தையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .