2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘எனது பெயர் வேண்டாம்’

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

புதிய கட்டடங்களுக்குத் தனது பெயரை வைத்துத் திறக்க வைக்க வேண்டாம் எனவும் பொதுப் பணத்தைத் தான் வீட்டுக்குக் கொண்டுபோவதில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

கந்தளாயில் உள்ள கந்தலாவ பாடசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டமொன்றை, இன்று (18) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், "கல்வித்துறையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்க்கும் ஓர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன். கல்வி விவகாரங்கள் குறித்து கல்விச் செயலாளருடன் நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம்” என்றார்.

கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதே நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமெனக் கூறிய அவர், “நமது எதிர்காலத்துக்குத் தேவையான கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறோம்” எனவும் தெரிவித்தார்.

மேலும், பெரிய, சவாலான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்கப்பட வேண்டும். அதன்படி, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் முக்கியமானதாகும் ​என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .