2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஒத்துழைப்பு வழங்ககூடிய அதிகாரிகளை உருவாக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

எமது அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககூடிய எமது அதிகாரிகளை உருவாக்க வேண்டியது எமது சமூகத்தின் கடமையென, கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியா, பூவரசன்தீவு அல்மினா வித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று (25) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்றைய காலத்தில் சமூகத்தில் ஏற்படும் குறைபாடுகள் அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குற்றஞ்சாட்டுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

“ஆனால், இதில் உள்ள எதார்த்தத்தைப் பெரும்பாலானவர்கள் உணர மறுக்கின்றனர். இன்று ஒரு சாதாரண பெரும்பான்மை இனத்தவர், அரச அலுவலங்களுக்குச் சென்று முடிக்கும் வேலைக்கும், எமது சமூகத்தவர்கள் அரசியல்வாதிகளையே எதிர்பார்கின்றனர்.

“இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் பெரும்பாலான அரச அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் எமது சமூகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. இதனால் அந்தச் சமூகத்தினருக்கு இயல்பாகவே கிடைக்கும் அபிவிருத்திகளுக்கு, எமது சமூகம் அரசியல் ரீதியாகப் போராடியே அதைப் பெற வேண்டியுள்ளது.

“எமது சமூகத்தினர் முக்கிய பதவிகளில் காணப்படின், அரசியல்வாதிகளின் துணை இன்றியே, பல அபிவிருத்திகளை நாம் கொண்டுவர முடியும். அவ்வாறு காணப்படின் எமது நேரமும் மீதமாகும். நாமும் பெரும்பான்மை அரசியல்வாதிகளைப் போல் பாரிய திடங்களை எமது சமூகத்துக்குக் கொண்டுவர எமது நேரங்களைச் செலவிட முடியும்.

“எமது சமூகம், கடந்த காலங்களில் கல்வியில் அக்கறை செலுத்தத் தவறியமையே இதற்கான பிரதான காரணமாகும்.  

“இதனாலேயே முஸ்லிம்களின் சனத்தொகை சதவீதத்தை விட அதிக கைதிகள் வெலிக்கடை சிறைசாலையிலும் சனத்தொகை சதவீதத்தை விட மிக குறைவானோர் அரச தினைக்களிங்களிலும் உள்ளனர்.

“ஆகவே, இது ஒரு சமூகப் பொறுப்பு. எமது சமூகத்தின் கல்வித் தரத்தை அதிகரிப்பதன் மூலமே, எமது சமூகத்தின் தரத்தையும் அதிகரிக்கலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .