2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்.

கிண்ணியா, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (05) மாலை 2.30 மணிக்கு, கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில், கிண்ணிய பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர்களான அப்துல்லா மஹரூப், கே.துரைரட்ணசிங்கம், முன்னால் முதலமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான நஜீப்.ஏ மஜீத் ஆகியோர்களின் இணைத் தலைமையில் இடம் பெற்றது.

பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான மதிப்பீடுகள் நடவடிக்கைகள் பற்றியும் , கம்பரெலிய திட்டம், அமைச்சுக்கள் ஊடான திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் நடை முறைப்படுத்தவிருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு இனி கட்டாயமாக திணைக்களத் தலைவர்கள் சமூகமளிக்க வேண்டும் எனவும், சமூகமளிக்கத் தவரும்பட்ச்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அப்துல்லா மஹரூப் இதன்போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கிண்ணியா பிரதேச செயலகத்தின் செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் றியாத் உட்பட திணைக்கள தலைவர்கள் , அரச அதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X