2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஒருங்கிணைப்புக் குழுக்களில் எடுக்கும் தீர்மானங்கள் கிடப்பில்’

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் எடுக்கும் தீர்மானங்கள், நடைமுறைக்கு வராது, கிடப்பில் இருக்கின்றன எனவும், இந்நிலை வேதனை அளிக்கின்றதெனவும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

மணல் அகழ்வு தொடர்பாக பல சந்தரப்பங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டபோதும், அவை தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அல்லை மாதிரிக் கிராமப் பாதுகாப்பு இயக்கதால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு, சேருவில், தெகிவத்த கிராமத்தில் நேற்று (15) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது, இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் அப்பிரச்சினை பேசப்பட்டு, மணல் அகழ்வைக் மட்டுப்படுத்துவது என்றும், அதனை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டோருடன் கலந்தாலோசித்து அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டுமெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டினார்.

எனினும், அவை எல்லாவற்றையும் கருத்தில்கொள்ளாது, மீண்டும் இந்த மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், திருகோணமலையில் இருந்து, நாளாந்தம் ஆயிரக்கணக்கான டிப்பர் லொறிகள், வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றன என்றும், இதனால் இவ்வாகனங்களில் பலர் விபத்துக்குள்ளாகிப் பலியாகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதனை நிறுத்துவதற்கு அனைவரும் இணைந்து, சாத்வீகப் போராட்டங்களில் இறங்க வேண்டுமெனத் தெரிவித்த துரைரெட்ணசிங்கம் எம்.பி, அதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .