2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடற்படையினர் மீது தாக்குதல்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை – கிண்ணியா, கண்டல்காடு பகுதியில், பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையின் போது, கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய  சந்தேகநபரை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் கட்டளையிட்டார்.

மேற்படி சந்தேகநபரை, பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலுவின் வாசஸ்தலத்தில் நேற்று (17) முன்னிலைப்படுத்திய போதே, இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

சீனக்குடா - வெள்ளைமணல், மக்குலூத்து பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் 29ஆம் திகதியன்று, கிண்ணியா, கண்டல்காடு, கீரைத்தோட்டம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை, கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட போது, கடற்படையினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது.

இதன்போது, கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கைகலப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்ததாகவும், காணொளிகளின் உதவியுடன் ஒருசிலரைப் பொலிஸார் தேடி வந்த நிலையில், மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணிகளான சபருள்ளா, ஜே. எம். லாஹீர், முபஸ்லின் ஆகுயோர் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக பதில் நீதவானின் கவனத்துக்குப் பொலிஸார் கொண்டு வந்தமையை அடுத்து, பிணை மறுக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .