2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதான நூலகத்தில் பத்திரிகைகள் பற்றாக்குறை

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும், கிண்ணியா பொது நூலகத்தில் வாசிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் செய்திப் பத்திரிகைகளில் பற்றாக்குறை நிலவுவதாக வாசகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 முடக்கத்துக்குப் பின்னர், திறக்கப்பட்ட கிண்ணியா பொது நூலகத்தில், வழமைக்கு மாறாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்திரிகை வாசிப்பதற்கு நூலகத்துக்கு வரும் வாசகர்கள், நூலகத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து, பத்திரிகைகளை வாசிப்பதற்கு முனைந்தாலும், முன்னரைப் போல் செய்தித் தாள்கள் கிடைக்கப்பெறுவதில்லை. பத்திரிகைகளில் பற்றாக்குறை நிலவுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, தமிழ் தேசியப் பத்திரிகைகள் மூன்று மட்டுமே தினமும் வாசிப்பதற்கு வைக்கப்படுவதாகவும் முன்னரைப் போல், பலவிதமான தமிழ்ப் பத்திரிகைகளும் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பிரசுரமாகும் முக்கிய பத்திரிகைகள், நூலகத்துக்குக் கிடைக்கப் பெறாமல் இருப்பது மிகப்பெரிய குறைபாடாகக் காணப்படுவதாகவும்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, கொவிட்-19 முடக்கத்துக்கு முன்னர் இருந்ததைப்போல், ஏனைய பத்திரிகைகளையும் மக்கள் வாசிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X