2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கந்தளாய் பிரதேச சபை தவிசாளராக சமன் ஏக்கநாயக்க தெரிவு

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்​

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, கந்தளாய் பிரதேச  சபையின் முதல் அமர்வு, கந்தளாய்  பிரதேச  சபை மண்டபத்தில் இன்று (12) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வின்போது, பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் சார்பில் சமன் ஏக்கநாயக்க  தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வாக்கெடுப்பின் போது, தவிசாளருக்கு ஆதரவாக 15  வாக்குகளும் எதிராக ஒன்பது  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 7 பேரும், சுயேற்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் எதிராக வாக்களித்தோடு, ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  உறுப்பினர்கள் 11 பேரும், அகிலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இருவரும்  ஆதரவாக வாக்களித்தார்கள்.

 மக்கள் விடுதலை முண்ணனி உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இச்சபைத் தவிசாளர் பிரதித் தவிசாளர் உட்பட மொத்தமாக 24  உறுப்பினர்களைக் கொண்டு இயங்கவுள்ளது.

இரண்டாம் கட்டமாக பிரதித் தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.மதார், 12 வாக்குகளைப் பெற்று பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கந்தளாய் பிரதேச சபை, கடந்த தேர்தலில் 11 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் தாமரையாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .