2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கந்தளாய்க்கு நாளை ஜனாதிபதி விஜயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

நெல்சிப் திட்டத்தின் கீழ், 70 மில்லியன் ரூபாய் செலவில் கந்தளாயில் நிர்மாணிக்கப்பட்ட  "கந்தளாய் நகர மண்டபம்",  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை (10) பிற்பகல் 3 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் தலைமையில், நடைபெறவுள்ள இத்திறப்பு விழாவில், மறைந்த காணியமைச்சர்  எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன எனப் பெயர் பொறிக்கப்பட்டு  "எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன மண்டபம்"  பெயர் சூட்டப்பட உள்ளதாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் குணவர்தனவின் ஞாபக சிலையும் திறை நீக்கம் செய்யப்படவுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 160 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .