2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கன்னியா கோவிலுக்கு வழிபட சென்றோருக்கு தடை

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 02:34 - 1     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி   தினமான் இன்று (16) வழிபடச்  சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு தவத்திரு அடிகளார்  தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக  கூறி,  அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை பொலிஸார்  கையளித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன்,  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன்போது, கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு சென்றவர்கள் மீது, இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து, இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 1

  • வ.ஐ.ச.ஜெயபாலன் Tuesday, 16 July 2019 02:36 PM

    கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. புத்த பிக்குகளும் சிங்கள பெத்த இனவாத தொல்பொருட் திணைக்களமும் கன்னியாவை தமிழரிடம் திரும்ப கையளிக்காவிட்டால் சிறிலங்கா நம் தாய்நாடு எனும் கருதுகோள் அர்த்தம் இழந்துவிடும். 1987ல் இந்தியாவுடனும் 2006ல் மேற்க்குநாடுகளுடனும் முரண்பட்டதன்மூலம் தமிழர்கள் தவறுவிட்டுவிட்டதாக புத்த பிக்குகள் நிரூபிக்க முனைவதை இலங்கை அரசும் ஆமோதிக்கிறதா? பிற நாட்டுகளின் உதவியுடன்தான் கன்னியாவையும் பிள்ளையார் கோவிலையும் மீட்க்க முடியும் என்கிற கையறு நிலைக்குள் ரணில் அரசு தமிழரை தள்ளிவிடக்கூடாது. கின்னியாவா இலங்கையா என்பதை சிங்கள ஆழும் சமூகங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்பதை சம்பந்தன் ஐயாவும் கூட்டமைப்பும் உறுதியாகவும் உடனடியாகவும் ரணில் அரசிடம் தெரிவிக்கவேண்டும். தமிழர்கள் இரண்டுதடவை தோற்க்கிறவர்களல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X