2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கருமலையூற்றுப் பள்ளிவாயல் காணி விடுவிப்பதாக தெரிவிப்பு

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியின் பயனாக கடந்த வருடம் பள்ளிக் காணியில் 20 பேர்ச்சஸ் அளவிலான காணியை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இனங்கியிருந்தது.

இதேவேளை, பள்ளிக்குறிய காணி மொத்தமாக 134 பேர்ச்சஸ் இருக்கின்தெனவும், மிகுதி காணியையும் விடுவிப்பது சம்மந்தமாக நேற்று (28) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அடுத்தகட்ட பேச்சுவார்தை இரானுவ தலைமையகத்தில் காணிப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரிகேடியர் சந்திரசேகரோடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதிக்கு பிறகு பேசுவதற்கும் தீர்மானிக்கப்ட்டிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பஸீர், கருமலையூற்று ஜும்மாப் பள்ளியின் தலைவர் எம்.பி.ஆசாத், செயலாளர் ஏ.எச்.சுபையிரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .