2024 மார்ச் 28, வியாழக்கிழமை

களைகளை அகற்றுமாறு கோரிக்கை

தீஷான் அஹமட்   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர்  நாவற்கேணி ஆற்றில் வளர்ந்து காணப்படும் நீர்த்தாவரங்களான களைகளை அகற்றி, நாவற்கேணி ஆற்றை சுத்தப்படுத்தித்தருமாறு,  உரிய அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சல்வீனியா, சல்லு, ஆகாயத்தாமரை தாமரை,  தொட்டாச்சுருங்கி  முதலான நீர்க்களைகள் காடு போன்று வளர்ந்து, ஆற்று நீரை மூடியுள்ளதோடு, ஆற்றிலுள்ள  நீரும் மாசடைந்து காணப்படுகின்றது.

இந்த நீரை, இங்குள்ள மக்கள் குளித்தல், ஆடைகழுவுதல் முதலான தேவைகளுக்கும் கால் நடைகளை நீர் பருகவிடுதல் மற்றும் விவசாயச்செய்கைக்கும் பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஆற்றை மூடிவளர்ந்துள்ள நீர் தாவரங்களான களைகளை அகற்றுமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X