2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணிக் கச்சேரி

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேசத்தில்,  உப்பு செய்கை பண்ணப்படும் நிலத்தை, உப்பு உற்பத்தியாளர்களுக்கே பகிர்ந்தளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட காணிக் கச்சேரி, காக்காமுனை, கச்சக் கொடுத்தீவு ஆகிய பிரதேசங்களில் இன்று (19) நடைபெற்றது.

கிண்ணியா பிரதேசத்தில் முனைச்சேனை, கச்சக்கொடித்தீவு  ஆகிய இடங்களில் சுமார் 400 ஏக்கர் உப்பு வயல்கள் காணப்படுகின்றன.

இந்த நிலங்களைத் தமக்கு உரிமையாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தவாறு,  சுமார் 20 வருட காலமாக உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத்  தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக   கிண்ணியா பிரதேச செயலாளர்  முஹம்மட் கனியால் இக்காணிக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X