2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காந்தி ஐயாவுக்கு சிலை வைக்க தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலையில் காந்தியவாதியாக வாழ்ந்து, மக்களுக்குப் பல சமூக, சமய, கல்விப் பணிகளை ஆற்றி அமரான  பொன்னம்பலம் கந்தையாவுக்கு (காந்தி ஐயா), சிலை வைப்பதற்கு, திருகோணமலை நகர சபையின் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபையின் தலைவர் நா.இராஜநாயகத்தின் தலைமையில் நேற்று (17) கூடிய இக்கூட்டத் தொடரில், உறுப்பினர்களின் பிரேரனைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது, அன்புவழிபுரம் வட்டாரத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வடமலை ராஜ்குமாரால் கொண்டுவரப்பட்ட பிரேரனையான காந்தி ஐயாவுக்கு சிலை வைப்பது தொடர்பான பிரேரனையை, உறுப்பினர் தி.பவித்திரன் வழிமொழிய, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரனை தொடர்பாக உறுப்பினர் வடமலை ராஜ்குமார் உரையின் போது, “திருகோணமலையின் கிராமப் புறங்களில் பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவரும் தனக்கு பல பட்டம் பதவிகள் கிடைத்த போதும் அவற்றை எல்லாம் தவிர்த்து, காந்தியக் கொள்கையுடனே தனது ஆயுள் வரை வாழ்ந்த உத்தமருக்கு சிலை வைப்பதற்கு, இந்தச் சபை அனுமதி வழங்க வேண்டும். திருகோணமலை, டைக் வீதியிலுள்ள முக்கோண சந்தியில் அதற்கான சரியான இடமுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .