2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காவலரணை சேதப்படுத்திய விவகாரம்: மேலுமொருவருக்கு விளக்கமறியல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை -  மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர், பெரியபாலத்தில் இருந்த பொலிஸ் காவலரணைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மேலுமொரு சந்தேகநபர், எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெரியபாலத்தைச் சேர்ந்த 44 வயதான மேற்படி நபரைக் கைதுசெய்த மூதூர் பொலிஸார், மூதூர் நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் மூதூர் பிரதேச சபை உறுபினர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 19ஆம் திகதிய  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, ஜனவரி 2ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ளனர்.

மூதூர், பெரியபாலத்தில் கடந்த 11ஆம் திகதி  இரவு 8 மணியளவில்  நடைபெற்ற விபத்தில், ஆலிம் நகரில் வசித்து வந்த எம். மஹ்சூன் (வயது 28) என்பவர், ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய பின்னர் டிப்பர் வாகனத்தின் சாரதி, வாகனத்தை நிறுத்தாது, தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பெரியபாலப்பகுதியில் ஒன்றுதிரண்டு, டயர்களை எரித்ததோடு, த்திரி சி.டி (3 CD)சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணையும் சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X