2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிண்ணியா நகர சபை அமர்வில் அமளிதுமளி

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, நகர சபையின் நான்காவது அமர்வு, கிண்ணியா நகர சபையின் விசேட சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் நேற்று (25) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.  

இதன்போது, தவிசாளரை நோக்கி சபை இடை நடுவே உறுப்பினர் ஹலீபத்துல்லா கடும் காரசாரமான பேச்சால் பேச ஆரம்பித்து, முன்னால் உள்ள தண்ணீர் போத்தலை தூக்கி வீசுவதற்கும் முற்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் கூறியதாவது,

நாங்கள் சபையில் முன்வைக்கின்ற பிரேரனைகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை, கடந்த காலங்களைப் போல் அல்லாது தவிசாளர் எம்முடன் இணைந்து செயற்படவேண்டும்.

எனது வட்டாரத்தில், வீதி மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை, உடைந்த வாய்க்கால் ஒன்று திருத்துவது தொடர்பில் தவிசாளர், செயலாளருக்கு அறிவித்தும் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தரை கூட அனுப்பி பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை, இனி அப்படி செய்யாது போனால் பைசல்நகர் பகுதியில் காணப்படும் கழிவு முகாமைத்துவ சேகரிப்பு பகுதியை 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்டு இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அதற்கு பிறகு கிண்ணியா நகர சபையை நடாத்திக் காட்டுங்கள்,  பிரேரனைகள் முன்வைத்தே நான்கு வருடங்கள் கடந்து விட்டன என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய, உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் எனது பெரியாற்று முனை வட்டாரத்துக்கு மின் விளக்குகள் பொருத்துதல் நடவடிக்கைகள் உட்பட ஏனைய அபிவிருத்திகளை எனக்கு தெரியாமல் வந்து செல்வது அவ்வளவு நல்லதல்ல மக்கள் எங்களை நம்பி எங்களுக்காக வாக்களித்திருக்கின்றனர் எனவே அவ்வாறு வரும் போது உறுப்பினர்களாகிய எங்களுக்கு கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .