2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிழையான நிர்வாக நடவடிக்கை’

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 மே 13 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேசச் செயலகத்தின் பிழையான நிர்வாக நடவடிக்கை காரணமாகவே, அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி, திருப்பியனுப்பப்பட்டுள்ளது என, ஒப்பந்தக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கம்பரெலிய கிராம அபிவிருத்தித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி, ஒப்பந்தக்காகாரர்களுக்கு வழங்கப்படாது, திறைசேரிக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளது.  

கம்பெரலிய வேலைத்திட்டத்துக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களினூடாக, திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் கிண்ணியா பிரதேசத்துக்கு பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால், ஒப்பந்தக்காரர்களால், கிண்ணியா பிரதேசத்தில் செய்து முடிக்கப்பட்ட 40 வேலைத்திட்டங்களுக்கான நிதி, திருப்பியனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

2018இல் ஏற்பட்ட 52 நாள்கள் அரசியல் குழப்பநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள், டிசெம்பர் மாதமளவில் முடிக்கப்பட்டதாகவும் அதற்கான கொடுப்பனவைப் பெறுவதற்கான சகல ஆவணங்களும், பிரதேசச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்றும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .