2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிண்ணியாவில் கடும் வரட்சி; 10,000க்கும் மேற்பட்டோர் பதிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக  நிலவும் கடும் வரட்சி காரணமாக, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 31 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பதிக்கப்பட்டுள்ளார்கள் என, கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

குடிநீர் இன்றிப் பதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனியின் ஆலோசனைக்கு அமைய, 892 குடும்பங்களைச் சேர்ந்த 3,222 பேருக்கு, பௌசர்கள் மூலம் நீர்  வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கடும் வரட்சி காரணமாக, விவசாயிகள், நன்னீர் மீன் வளர்ப்பாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வாழ்வாதார ரீதியாகப் பெரும் அவதிப்படுகின்றனரென, கிண்ணியா பிரதேச செயலக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முகம்மது றஸ்மி  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .