2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் பால் உற்பத்தி பாதிப்பு

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் பெருவாரியாக இறந்து வருகின்றமையால், அப்பிரதேசத்தின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல் நிலப் பற்றாக்குறையாலும் ஒருவித நோய் காரணமாகவும் இப்பிரதேசத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாகத் தெரிவிக்கும் பண்ணையாளர்கள், தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவில் அதிகளவில் பால் சேகரிக்கப்படும் இடங்களில் ஒன்றான சூரங்கல் பால் சேகரிப்பு நிலையத்தில் அண்மைக்காலமாக சுமார் 600 லிட்டர் வரையான பால் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றது.

இந்நிலையத்தில், நாளாந்தம் சுமார் 6,000 முதல் 8,000 லிட்டர் வரையில் பால் சேகரிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .