2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண விடயங்கள் குறித்து ஆளுநர் ஆராய்வு

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஏ.எம்.கீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழுவொன்றுடன், கிழக்கு மாகாணம் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆராய்ந்துள்ளார்.

மேற்படி தூதுவர் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல், திருகோணமலையிலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களான  டெனீஸ் சாய்ப்பி, ஜோன் ரோட்பி , தூதகத்தின் பணியாற்றுகின்ற டானியா பெரேரா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில்  சுற்றுலாத் துறை, தொல்பொருள் ஆராய்ச்சி,  கல்வி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் தற்போது வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துவதற்காக பல பில்லியன் செலவில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது கலந்துகொண்ட தூதுவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்திலும் தாம் பல்வேறுபட்ட உதவிகளைத் தொடர்ந்தும் செய்து வருவதாகவும் காணாமல் போனோர் தொடர்பில் செயற்படும் அமைப்புகளுக்கான அலுவலகங்கள் அமைப்பது தொடர்பிலும் நாம் தொடர்ந்து உதவி வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .