2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தின் 385 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

Editorial   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் மேலும் ஒரு தொகுதியினர் ஆசிரியர் சேவைகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளனரென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான இந்த ஆசிரிய நியமனங்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு, வெபர் மைதானத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

அன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 322 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்துக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த நியமனங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த விசேட உயர்மட்டக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், முதலமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .