2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

குச்சவெளி வீதிக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ் 

நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 21 மில்லியன் ரூபாய் செலவில், குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  ஜாயா நகர் பிரதேசத்தில் காபட் வீதி அமைக்கும் வேலைகள், நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால், வைபவ ரீதியாக இவ்வேலைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில், கிழக்கு மாகாண  உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர், மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர், குச்சவெளி பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர் ஆசிக் மொஹமட் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்பிரதேச பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் அதிதிகளுக்கு பெருவரவேற்பு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .