2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குருக்க‌ள் மீது சாயத்தை வீசியசெய‌லுக்கு முஸ்லிம் உல‌மா க‌ட்சி கண்டனம்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் 


 கன்னியாவில் இந்தும‌த‌ குருக்க‌ள் மீது தேனீர் சாயத்தை வீசியசெய‌லை முஸ்லிம் உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல்

ம‌ஜீத் வ‌ன்மையாக‌ க‌ண்டிப்பதாக ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். 

க‌ன்னியா என்ப‌து த‌மிழ் பேசும் ம‌க்க‌ளின் பூமியாகும். இங்கு காலாகால‌மாக‌ த‌மிழ‌ர்களும் முஸ்லிம்க‌ளுமே வாழ்ந்தார்க‌ள் என்றும்,

க‌ன்னியா வெந்நீரூற்று கிண‌ற்றுக்க‌ருகில் ஒரு சிறிய‌ ப‌ள்ளிவாய‌லும் 40 அடி இரு முஸ்லிம் ச‌மாதியும் இருக்கின்ற‌ன‌. இவை ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌த்துக்கு முந்திய‌வை என‌ வரலாற்றில் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ இரு ச‌மாதிக‌ளும் இராவ‌ண‌ன் ம‌ற்றும் அவ‌னின் தாயுடைய‌து என‌ இந்தியாவைச்சேர்ந்த‌ சீக்கிய‌ ஆய்வாள‌ர் குறிப்பிட்டுள்ளார். இராவ‌ண‌ம் இந்துவா முஸ்லிமா என்ப‌தில் க‌ருத்து வேறு பாடு இருப்பினும் அச்சமாதிக‌ளை பாதுகாத்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளாகும்.

யுத்த‌ முடிவில் க‌ன்னியாவில் சிங்க‌ள ஆக்கிர‌மிப்பு ஏற்ப‌ட்ட‌து.

யுத்த‌ம் முடிந்தும் முஸ்லிம்க‌ள் குடியேற‌ த‌மிழ் த‌ர‌ப்புக்க‌ளும் இட‌ம் கொடுக்க‌வில்லை என்ப‌தை சிங்க‌ள‌ இன‌வாத‌ம் த‌ன‌க்கு சாத‌க‌மாக‌ ப‌ய‌ன் படுத்திக்கொண்டது. இத்த‌கைய‌ ஆக்கிர‌மிப்பை த‌மிழ் பேசும் ச‌மூக‌ங்க‌ள் இணைந்து க‌ண்டிக்க‌ வேண்டுமென முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் க‌ண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .