2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல் வேண்டும்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி என்ற பதம் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த சொல்லிற்கு மிகவும் பொருத்தமான தளமாக கூட்டுறவு சங்கங்கள் திகழ்கின்றது.

கூட்டுறவு சங்கங்களை  2019இல் சிறந்த நிலைக்கு நாம் கொண்டு செல்ல முயற்சிக்கவேண்டுமென, திருகோணமலை  மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன் தெரிவித்தார்.

இன்று (20) காலை 10 மணியளவில், திருகோணமலை மாவட்ட கூட்டுறவு சபையில் அதன் தலைவர் க.சதானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன்,  நடந்த நல்லாட்சி தொடர்பான செயலமர்வில் அவர் கருத்துவெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறந்த முறையில் செயற்படும் கூட்டுறவுச்சங்கங்களை நாம் ஊக்குவிக்க பின் நிற்கமாட்டோம். அவ்வாறான சங்கங்களுக்கு அரச, பொது அமைப்புக்களின் பங்களிப்புக்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.

குறிப்பாக நிதி, கடன் கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைளை செய்யக்கூடிய வசதி வாய்ப்புக்கள் கூட்டுறுவுச்சங்கங்களுக்கே அதிகமுள்ளன.

பல இடங்களில் இவ்வாறான சங்கங்கள் பல தொழில் திட்டங்களை முன்னெடுக்கின்றன.

பல இடங்களில் சங்கங்கள் இயக்கமின்றி முடங்கியுள்ளன. இவ்வாறு இயங்காத சங்கங்களையும் நாம் இயங்கவைக்க வேண்டும். இவை இயங்குவதாக இருந்தால் சங்கங்களுக்கிடையில் நல்லாட்சி சூழல்  நிலவவேண்டும்.

கடந்த 3 வருடங்களாக நல்லாட்சி நாட்டில் நிலவியதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியை தரக்கூடிய சிறந்த அமைப்பாக கூட்டுறவுச்சங்கங்கள் திகழ்கின்றன. இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .