2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பூருக்கு ஆளுநர் விஜயம்

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

 

சம்பூர், சூடைக்குடா பகுதியில் அமைந்துள்ள குன்றத்தூர் மத்தல மலை ஆலயத்தை, சேருவில விகாரையின் பௌத்த குருமார் இருவர், கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், இந்த ஆலய வளாகத்தில் தொல்பொருள் இருப்பதாகவும் ஆலய பரிபாலண சபையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலைமை தோன்றியது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, மாவட்ட செயலாளர் ஆகியோர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) சென்று நிலமைகளைப் பார்வையிட்டார்.

அத்துடன், பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

இந்த ஆலயத்தின் வரலாறு குறித்து வந்திருந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது,

“குன்றத்தூர் ஆலயம் பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதாகும். பல வருடங்களாக நாங்கள் இந்த ஆலயத்திலேயே பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

“மேலும், இந்த ஆலயத்துக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோணேஸ்வரர் ஆலயத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புள்ளதை வரலாறு, இதிகாசங்களில் காணலாம்.

“இதனால் இவ்வாறு பழமை மிக்க ஆலயத்தில் தொல்பொருள் இருப்பதென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு, இந்த ஆலயத்தை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனறனர்.

இவ்விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,

“மறு அறிவித்தல் வரும் வரை இவ் ஆலயத்தில் எவ்வித புனரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. அதேவேளை, ஆலயத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடலாம்” எனத் தெரிவித்தார்.

அத்தோடு, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளது ஒத்துழைப்புடன், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து நல்ல முடிவைப் பெற்றுத் தருவேன் எனவும் வந்திருந்த ஆலய நிர்வாகத்திடமும் பொதுமக்களிடமும் வாக்குறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X