2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறைக் கைதிகளுக்கு முதலுதவிப் பயிற்சி

எப். முபாரக்   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக முதலுதவித் தினத்தை முன்னிட்டு, திருகோணமலை சிறைச்சாலைக் கைதிகளுக்கு முதலுதவி தொடர்பான பயிற்சி, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையால், சிறைச்சாலை வளாகத்தில் நேற்று (15)  நடத்தப்பட்டது.

திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சமந்த லியனகேயின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், முதலுதவி என்றால் என்ன, ஒருவருக்கு எப்படி முதலுதவி செய்வது போன்ற விளங்கங்களை செயன்முறை பயிற்சியுடன் கைதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

கைதிகளின் பாவனைக்காக முதலுதவிப் பெட்டிகள் இரண்டும் புனர்வாழ்வு அதிகாரி எப்.முபாரக்கிடம் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் திருகோணமலைக் கிளை சார்பாக அதன் உப தலைவர் சி.டி.சிவரெட்ணராஜா, வைத்தியர் என்.ரவிச்சந்திரன், வி.முரளிதரன், கிசோகாந், வை.கரிதரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு தெளிவுபடுத்தினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .