2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிவில் சமூக அமைப்புகள் சார்பாக சுயேட்சைக்குழு களமிறங்குகிறது

பொன் ஆனந்தம்   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், திருகோணமலை நகரசபைக்கு சிவில் சமூக அமைப்புகள் சார்பாக சுயேட்சைக் குழுவொன்றை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரசபை மண்டபத்தில்  சிவில் அமைப்புகளைச் சார்ந்த சுமார் 50 பேர் வரை, இன்று மாலை 4 மணியளவில் கூடி ஆராய்ந்தனர்.

இதன்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டு, பலர் வேட்பாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.மட்டுமன்றி அதற்கான தெரிவுக்குழுக்களும் தெரிவுசெய்யப்பட்டன.

இதற்கான கட்டுப்பணம், தேர்தல் திணைககளத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் சாரப்பில் வர்ணகுலநாதன்  தர்மபவன் தெரிவித்தார்.

அதிகளவிலான இளைஞர்களைக் கொண்ட இந்தக் குழுவில்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் இருந்த குறைபாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகள், மக்கள் விரும்பாத பொருத்தமற்ற பிரதிநிதிகள் தெரிவு, குறிப்பாக வெளிப்டைத்தன்மையற்றதுமான செயற்பாடுகள் மற்றும் தமிழ்மக்களின் எதிர்கால நலன்கருதாத  சில தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் நடிக்கைகளைக் கண்டித்தும்  தமிழ் தேசியத்தைச் சிதைக்கும் நடவடிக்கைள், எதிர்காலத்தில் அதனை தடுக்கும் வகையிலும் இந்த குழு இறக்கப்படவேண்டும் என கலந்துகொண்ட பலரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

குறித்தகுழுவில் ஓய்வு நிலை பிரதேச செயலாளர் ஒருவரும் களத்தில் இறக்கத் தீர்மானிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X