2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கவும்’

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமென, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியர்களும் இரவு பகலாகக் கடமையாற்றி வருகின்றனர்.  ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார துறை ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகள், போக்குவரத்துக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நோயாளர்களை ஒரு வைத்தியசாலையிலிருந்து இன்னுமொரு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பட்சத்தில் அம்பியூலன்ஸில் செல்லும் ஊழியர்களுக்குப் பிரயாண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்திருந்த போதிலும் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் ஊழியர்கள் மன வேதனையடைந்து வருவதாகவும் கே.துரைரட்ணசிங்கம் மேலும் தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மேலதிகமான கொடுப்பனவுகளை வழங்காமல் இருப்பது அரசாங்கம் அவர்களுக்கு செய்யும் பாரிய  சதியெனவும், கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .